காரைக்கால் மீனவருக்கு 9 மாதங்கள் சிறை: ரூ.40 லட்சம் அபராதம்
கொழும்பு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி, மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கையால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்களில் 9 பேரை இன்று விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9 மீனவர்களில் இரு சிறுவர்களை எச்சரித்தும், 7 பேரை நிபந்தனைகளுடனும் விடுதலை செய்துள்ளது. அதேசமயம் படகு ஓட்டுநருக்கு மட்டும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடையே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.