சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி
சென்னை, சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று நடந்தது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜாகோபோ பெரெட்டினி , ஜப்பானின் ஜோ ஷிமாபுகுரோ ஆகியோர் மோதினர்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில்ஜோ ஷிமாபுகுரோவை தோற்கடித்து ஜாகோபோ பெரெட்டினி 2-வது சுற்றுக்கு முன்னேறினார் .