சாம்பியன்ஸ் டிராபி தொடர்; நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி
![சாம்பியன்ஸ் டிராபி தொடர்; நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி](https://media.dailythanthi.com/h-upload/2025/02/05/37718436-4-refree-icc.webp)
துபாய்,8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான நடுவர்கள் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று அறிவித்துள்ளது. இதில் 12 கள நடுவர்கள் மற்றும் 3 நடுவர்கள் ( மேட்ச் ரெப்ரீஸ்) இடம் பெற்றுள்ளனர். இந்த நடுவர்கள் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கள நடுவர்கள் விவரம்: குமார் தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கேப்னி (நியூசிலாந்து), மைக்கேல் கோப் (இங்கிலாந்து), அட்ரியன் ஹோஸ்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), பால் ரீபெல் (ஆஸ்திரேலியா), ஷர்புடோலா இப்னே ஷாகித் (வங்காளதேசம்), ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).மேட்ச் ரெப்ரீஸ்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைக்ராப்ட் (ஜிம்பாப்வே). A world-class officiating team featuring 12 umpires and 3 match referees is set for the 2025 #ChampionsTrophy Details https://t.co/z3tQ8vVQiS
மூலக்கதை
![](https://www.tamilmithran.com/img/apple_icon.png)