2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 9 லட்சம் கோடி இலக்கை எட்டும்; பிரதமர் மோடி நம்பிக்கை

டெல்லி,இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி வர்த்தக கண்காட்சி கடந்த 14ம் தேதி தலைநகர் டெல்லியில் தொடங்கியது. பாரத் ஜவுளி 2025 என்ற நடைபெற்று இந்த வர்த்தக கண்காட்சி நாளை வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நாடு முழுவதில் இருந்து ஜவுளி துறையை சேர்ந்த பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், ஜவுளி வர்த்தக கண்காட்சியில் இன்று பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,உலகின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி நாடுகளில் ரூ. 3 லட்சம் கோடி வர்த்தக மதிப்புடன் நாம் தற்போது 6வது இடத்தில் உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 9 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை உள்ளது. ஜவுளி துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியிலான கடினமான பணிகளால் அன்னிய முதலீடு 2 மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய பருத்தி தொழில்நுட்ப இயக்கத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.
மூலக்கதை
