பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

  தினத்தந்தி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து  2 பேர் பலி

மும்பை,மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் கமலேஷ்வர் பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், பட்டாசு ஆலையில் மதியம் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முனீஷ் மதேவ், லெட்சுமி ராஜக் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை