'அஜித் சார் கூட நடிக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்'' - விஜய் சேதுபதி

சென்னை,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை 2' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், விஜய் சேதுபதி, சமீபத்தில் தனியார் கல்லூரியின் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவரிடம், நடிகர் அஜித்துடன் இணைந்து எப்போது படம் பண்ணப் போறீங்க? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "இந்த கேள்வியை என்னிடம் பலர் கேட்டுள்ளனர். ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன். இதற்கு முன் நடப்பதாக இருந்தது ஆனால் அது நடக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன்" என்றார்.
மூலக்கதை
