சாம்பியன்ஸ் டிராபி: கோப்பையை வெல்லும் அணி எது...? ஆஸி. முன்னாள் கேப்டன் கணிப்பு

சிட்னி, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும்" என்று கூறினார்.
மூலக்கதை
