சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடக்கம்: பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

கராச்சி,8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. கராச்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து தற்போதைய நிலவரப்படி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வில் யங்க் 22 ரன்னிலும், கான்வே 10 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
மூலக்கதை
