ஒருநாள் கிரிக்கெட்: அதிக கேட்ச் செய்த இந்திய வீரர்.. முதலிடம் பிடித்த விராட் கோலி

  தினத்தந்தி
ஒருநாள் கிரிக்கெட்: அதிக கேட்ச் செய்த இந்திய வீரர்.. முதலிடம் பிடித்த விராட் கோலி

துபாய், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 2 கேட்ச் பிடித்தார். இதனையும் சேர்த்து இதுவரை அவர் ஒருநாள் போட்டிகளில் 156 கேட்சுகள் பிடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் முகமது அசாருதீனுடன் விராட் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.அந்த பட்டியல்:1. விராட் கோலி/ முகமது அசாருதீன் - 1562. சச்சின் - 1403. ராகுல் டிராவிட் - 1244.சுரேஷ் ரெய்னா

மூலக்கதை