துபாய் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா அதிர்ச்சி தோல்வி

துபாய்,துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷியா) உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை மிர்ரா ஆண்ட்ரீவா கைப்பற்றி ரைபகினாவுக்கு அதிர்ச்சி அளித்தார். ரைபகினா இந்த ஆட்டத்தில் 4-6, 6-4 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.ஆண்ட்ரீவா இறுதிப்போட்டியில் கிளாரா டவுசன் (டென்மார்க்) உடன் மோத உள்ளார்.
மூலக்கதை
