முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்பட வில்லை - ரெயில்வே விளக்கம்

புதுடெல்லி,நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன்படி 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏ.சி. ரெயில் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.இதனையடுத்து முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை குறைக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதில் முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே தெரிவித்துள்ளது.
மூலக்கதை
