வார இறுதியில் சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னை,தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.64,560-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ. 64,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 8,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.108 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மூலக்கதை
