புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 3-வது வெற்றி

புவனேஸ்வர்,6-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங் (22-வது நிமிடம்), ஜர்மன்பிரீத் சிங் (45-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அயர்லாந்து அணியில் ஜெர்மி டன்கன் 8-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். இந்திய அணி இன்று அயர்லாந்தை மறுபடியும் சந்திக்கிறது.இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியை தழுவியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஜெர்மனி அணிகள் மீண்டும் மோதுகின்றன.
மூலக்கதை
