அப்பா செயலி 'பிராண்ட்' செய்வதுபோல உள்ளது: சீமான் விமர்சனம்

  தினத்தந்தி
அப்பா செயலி பிராண்ட் செய்வதுபோல உள்ளது: சீமான் விமர்சனம்

பழனி,பழனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டது முதல் தவறு. கல்வி என்பது மாநில உரிமை. அதை மத்திய அரசுக்கு கொடுத்ததும் தவறு. அதனாலேயே வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கிறார்கள். மும்மொழி என்பதை தவிர்த்து பன்மொழி என தெரிவித்தால் அதை ஏற்கலாம். மாணவர்கள் விரும்பினால் இந்தி படிக்கட்டும், அதை கொள்கையாக கொண்டு வருவது தவறு.தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அப்பா' என்ற செயலியை அறிமுகப்படுத்தியது என்பது 'பிராண்ட்' செய்வது போல உள்ளது. ஜெயலலிதாவை அம்மா என்று பொதுமக்கள் அழைத்தது இயற்கையாக அமைந்தது. ஆனால் 'அப்பா' என்ற உறவு முறையை மனதார அழைக்க வேண்டுமே ஒழிய 'பிராண்ட்' செய்வது ஆகாது. நீங்கள் நல்ல ஆட்சி செய்தால் மக்கள் உங்களை 'அப்பா' என்று அழைப்பார்கள், போற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை