ராணிப்பேட்டை: எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அடுத்த கலவை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்று அமைந்திருந்தது. அந்த கடையின் விரிவாக்கத்திற்காக வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது தீ ஏற்பட்டது.எலக்ட்ரிக்கல் கடை என்பதால் கிடுகிடுவென தீ பரவ தொடங்கியது. இதனால் அப்பகுதியில் அதிகளவு கரும்புகை சூழ்ந்தன. இதனிடையே தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர்.இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
