அப்பா என்ற புதிய செயலியை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

  தினத்தந்தி
அப்பா என்ற புதிய செயலியை வெளியிட்டார் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் 'அப்பா' எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இச்செயலி பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றாட தகவல் பகிர்வு மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான அரசு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது.அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அனைத்து உத்தரவுகளையும் இதில் காணலாம். சுமார் 46 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களை சார்ந்த சுமார் 12, ஆயிரம் தனியார் பள்ளிகள் இந்த தளத்தின் மூலம் பயனடைவர்.

மூலக்கதை