மராட்டியம்: பெண்ணை பின் தொடர்ந்த வாலிபர் கொடூர கொலை; 10 பேர் கைது

நான்டெட்,மராட்டியத்தின் நான்டெட் மாவட்டத்தில் ஹத்காவன் நகரில் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். பல நாட்களாக இது தொடர்ந்து நடந்துள்ளது என கூறப்படுகிறது.இதனை அந்த பெண் அவருடைய குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ஷேக் அராபத் (வயது 21) என்ற அந்த வாலிபரை தேடி அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, வீடு அருகே நின்றிருந்த ஷேக்கை அவர்கள் கும்பலாக தாக்கியுள்ளனர்.இந்த சம்பவத்தில், அவர் காயமடைந்து உள்ளார். அவர்களை தடுக்க ஷேக்கின் தாயார் வந்துள்ளார். அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், ஷேக்கை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
