மகா கும்பமேளா வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா வரும் பிப்ரவரி 26-ந்தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், மகா கும்பமேளாவில் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க நேரிடுவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மகா கும்பமேளா நடைபெறும் பகுதிகளில் சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்த உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் பசுமைத் தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.
மூலக்கதை
