சுப்மன் கில்லின் விக்கெட்டை கொண்டாடிய அப்ரார் அகமது.. விமர்சித்த பாக்.முன்னாள் வீரர்

  தினத்தந்தி
சுப்மன் கில்லின் விக்கெட்டை கொண்டாடிய அப்ரார் அகமது.. விமர்சித்த பாக்.முன்னாள் வீரர்

துபாய்,சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரோகித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் சுப்மன் கில் - கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஷாகீன் அப்ரிடியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விரட்டி அவரை மிரள வைத்த கில் 46 ரன்களில் (52 பந்து, 7 பவுண்டரி) அப்ரார் அகமதுவின் சுழலில் போல்டானார்.சுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியதை அப்ரார் அகமது ஆக்ரோஷமாக கொண்டடினார். சுப்மன் கில்லை பார்த்து வெளியே போ.. வெளியே போ.. என்ற வகையில் பெவிலியன் நோக்கி தலையசைத்து கொண்டாடினார். இதனால் சுப்மன் கில் கோபத்துடன் பெவிலியின் சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது.Wtf is this celebration??#INDvsPAK #ChampionsTrophy pic.twitter.com/C5TOIR5wW6இந்நிலையில் இந்த கொண்டாட்டம் தவறானது என்று அப்ரார் அகமதுவை பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அவர் வீசிய பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் அவரின் கொண்டாட்டம் என்னை ஈர்க்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு நேரமும் இடமும் உண்டு. அணி தடுமாறி கொண்டிருக்கும்போது நீங்கள் விக்கெட் எடுத்தால் பணிவாக இருக்க வேண்டும். அணியின் சீனியர் வீரர்கள் இதனை சொல்லி கொடுக்க வேண்டும். போட்டியின் சூழ்நிலையைப் பாருங்கள். நீங்கள் தோல்வியின் பிடியில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது போல் கொண்டாடுகிறீர்கள்," என்று கூறினார்.

மூலக்கதை