ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் பயணம்: மாவட்ட செயலாளர் திடீர் விலகல்

  தினத்தந்தி
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் பயணம்: மாவட்ட செயலாளர் திடீர் விலகல்

ராணிப்பேட்டை, சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மை காலமாக பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். மேலும் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, "பருவகாலங்களில் இலையுதிர் காலம் இருப்பது போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்" என்று பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன், கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக பாவேந்தன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் மாவட்ட செயலாளர் பாவேந்தன் திடீரென விலகியுள்ளது அக்கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது.

மூலக்கதை