விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இதே மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமியின் 193வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி வேலை நாளாகவும் அறிவித்து தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (பிப்.26ம் தேதி) மகா சிவராத்திரி விழாவும், மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவும், 11-ம் தேதி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக் கொடை விழாவும் நடைபெறுவதை முன்னிட்டு இந்த 3 நாட்களுக்கு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது.
மூலக்கதை
