ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னையை வீழ்த்திய பெங்களூரு எப்.சி

பெங்களூரு,13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி முதல் பாதியிலேயே ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி பெற்றது.
மூலக்கதை
