சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி.. இங்கிலாந்து அணி வெளியேற்றம்

லாகூர்,9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இதில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் 326 ரன் இலக்கை நோக்கி பேட் செய்த இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. 49.5 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை சுவைத்தது. ஒமர்ஜாய் 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஜட்ரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.இந்த பிரிவில் தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
மூலக்கதை
