பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

  தினத்தந்தி
பாகிஸ்தான்  வங்காளதேசம் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இதில் ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகின்ற 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டதால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து விட்டன. எனவே இந்த போட்டி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவ்விரு அணிகளுக்கும் கடைசி ஆட்டமாகும். இதனை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் கடுமையான முயற்சியுடன் போராட உள்ளன. இந்நிலையில் அங்கு தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை