சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழா: வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு (சார்-ஆட்சியர் அலுவலகம் உள்பட) வரும் 14-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஆனால், அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் இதனை ஈடு செய்யும் வகையில் வரும் 22ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
