எலான் மஸ்கின் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ ஒப்பந்தம் - பிரதமர் மோடியின் ஏற்பாடு என காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி, எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ ஆகியவை வணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவுக்குள் ஸ்டார்லிங்க் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஏர்டெல், ஜியோ ஆகியவை ஸ்டார்லிங்குடன் கைகோர்த்து இருப்பதாக 12 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து அறிவித்துள்ளன.ஸ்டார்லிங்க் அதிபர் எலான் மஸ்க் மூலமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நன்மதிப்பை பெறுவதற்காக பிரதமர் மோடிதான் இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததாக தெளிவாக தெரிகிறது.அதேசமயத்தில், இதுதொடர்பாக நிறைய கேள்விகள் எழுகின்றன. தேச பாதுகாப்பு தொடர்பான முக்கிய கேள்வி உள்ளது. தேச பாதுகாப்புக்காக இணைப்பை துண்டிக்க வேண்டி இருந்தால், அதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கும்?. இதர செயற்கைக்கோள்வழி இணைய சேவை நிறுவனங்களும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுமா? இதுபோல், டெஸ்லா கார் நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க ஏதேனும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா?" என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மூலக்கதை
