வரும் நிதி ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக உயரும்: நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

  தினத்தந்தி
வரும் நிதி ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக உயரும்: நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

சென்னை, 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 195,173 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் 1,92,752 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2,20,895 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது. வணிகவரிகளின் கீழ் 1,63,930 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் 26,109 கோடி ரூபாய், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் 13,441 கோடி ரூபாய் மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் 12,944 கோடி ரூபாய் வரி வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும். மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வரி வசூல் திறனில் முன்னேற்றம் ஆகியவற்றின் பலனாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26 ஆம் ஆண்டில் 14.60 சதவீத வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 2,49,713 கோடி ரூபாய் மொத்த வருவாய் வரவுகளில் 75.31 சதவீதத்தைக் கொண்டிருக்கும்.அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், மத்திய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. தேசியப் பேரிடர் நிவாரண நிதிமத்திய அரசு. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,354 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள். திருத்த மதிப்பீடுகளில் 20,538 கோடி ரூபாயாக கணிசமான அளவிற்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் முழு பங்குத்தொகையை மத்திய அரசு வரும் நிதியாண்டில் விடுவிக்கும் எதிர்பார்த்து. மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.மாநில மொத்த உள்நாட்டு உற்பத்திஒட்டுமொத்தத்தில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம். கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவிலும் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் 2016-17 ஆம் ஆண்டில் 3.41 சதவீதத்திலிருந்து, 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டில் 196 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இந்த 145 சதவீதம் குறைவினால் மாநில அரசிற்கு ஏற்படக்கூடிய 45,182 கோடி ரூபாய் இழப்பானது. 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையில் ஏறத்தாழ 44,43 சதவீதத்திற்கு சமமாகும்.2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 299,009 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள். திருத்த மதிப்பீடுகளில் 293,906 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3.31569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும்.செலவினங்களைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,48,289 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், வளர்ச்சிப் பணிகள் சாரா செலவினங்கள் குறைந்ததன் காரணமாக, திருத்த மதிப்பீடுகளில் 3,40,374 கோடி ரூபாயாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 9.65 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும்.2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 47,681 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மூலதனப் பணிகளுக்கான செலவினங்கள், திருத்த மதிப்பீடுகளில் 46.766 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மூலதனப் பணிகளுக்கான செலவினங்களை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளின் தொடர்ச்சியாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 57,231 கோடி ரூபாயாக மூலதனப் பணிகளுக்கான செலவினங்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 2238 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும். 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், நிகரக் கடன் உட்பட ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், நிகரக் கடன் உட்பட மூலதனச் செலவினங்கள் 65,328 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 49,279 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, திறமையான நிதி மேலாண்மையின் பலனாக திருத்த மதிப்பீடுகளில் 46,467 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் நடப்பு ஆண்டில் குறைந்த போதிலும் வருவாய்ப் பற்றாக்குறை குறைவாகவே அமைந்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், வருவாய்ப்பற்றாக்குறை மேலும் குறைந்து 41,635 கோடி ரூபாயாக இருக்கும். என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்திமுதன்முதலாக 2015-16 ஆம் ஆண்டு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் என்ற அளவினைக் கடந்த வருவாய்ப் பற்றாக்குறை, மாநில நிதி நிலைமை தொடர்ந்து சரிவை சந்தித்ததால், 2020-21 ஆம் ஆண்டில் 3.28 சதவீதமாக உயர்ந்தது. இந்த சரிவுப் போக்கினை நேர்மறையாக மாற்றிட வேண்டும் என, இந்த அரசு மேற்கொண்ட அயராத முயற்சிகளின் காரணமாக. அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து வரும் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறையின் விகிதம் 1.17 சதவீதமாக, 2015-16 ஆம் ஆண்டு நிலைக்கு அருகில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,08,690 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் 6,992 கோடி ரூபாய் குறைந்து, 1,01,698 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறைவாக மதிப்பிடப்பட்ட போதிலும், வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.44 சதவீதமாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 3.26 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 1,06,963 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது.நிகரக் கடன்கள் குறைந்துள்ளபோதிலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 26.41 சதவீதமாக மதிப்பிடப்பட்ட மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்தக் கடன் விகிதமானது. தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அடிப்படையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சற்றே அதிகரித்து 26.43 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இவ்விகிதம் 26.07 சதவீதமாக மேலும் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, 15வது நிதிக்குழு 2025-26 ஆம் ஆண்டிற்கு நிர்ணயித்துள்ள 28.70 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது."The woods are lovely, dark and deep But I have promises to keep And miles to go before I sleep And miles to go before I sleep"இக்கவிதை வரிகள் உழைப்பு உழைப்பு உழைப்பு என ஓயாது. இமைப்பொழுதும் கண் துஞ்சாது தமிழ்நாட்டின் நலன் குறித்து எந்நாளும் சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் நமது முதல்-அமைச்சர் அவர்களுக்கு மிகச்சரியாக பொருந்தி வருவதை இம்மாமன்ற உறுப்பினர்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து 2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

மூலக்கதை