பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்: வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,முதல்-அமைச்சரின் 1,000 உழவர் நலச் சேவை மையங்கள்,புதிய தொழில்நுட்பங்கள்,சிறு குறு விவசாயிகள் நலன், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவிஎனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2025 வெளியிடப்பட்டுள்ளது.அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,புதிய தொழில்நுட்பங்கள்,சிறு குறு விவசாயிகள் நலன், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,… pic.twitter.com/mDWjaharKa
மூலக்கதை
