கோடை விழா: உதகையில் மலர் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு

  தினத்தந்தி
கோடை விழா: உதகையில் மலர் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு

உதகை, மலைகளின் அரசியாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் களை கட்டுகிறது. வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் கோடை விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா நடைபெறும் தேதியை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 3,4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. மே 9 மற்றும் 10,11 ஆகிய தேதிகளில் கூடலூரில் 11வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. மே 10,11,12 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி நடைபெறுகிறது..கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. மே 23,24,25 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக் கண்காட்சி நடக்கிறது.முதல்முறையாக குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் மே 30 முதல் ஜூன் 1ம் தேதி மூன்று நாட்கள் மலை பயிர்கள் கண்காட்சி நடக்கிறதுஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை