சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

  தினத்தந்தி
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

சென்னை,தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தங்கம் விலை குறைந்தது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பவுனுக்கு ரூ.40 குறைந்தது. சனிக்கிழமை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு பவுன் ரூ.65 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் மீண்டும் ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து இருந்தது. கிராமுக்கு ரூ.2, கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.8,215 -ஆகவும் ஒரு சவரன் ரூ.65,720 ஆகவும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.110 ஆக உள்ளது.

மூலக்கதை