இந்தியா ஒன்றும் ஓய்வு இல்லம் இல்லை; மக்களவையில் அமித்ஷா பரபரப்பு பேச்சு

  தினத்தந்தி
இந்தியா ஒன்றும் ஓய்வு இல்லம் இல்லை; மக்களவையில் அமித்ஷா பரபரப்பு பேச்சு

புதுடெல்லி,நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குடியுரிமை மற்றும் வெளிநாட்டினருக்கான மசோதா 2025 பற்றிய விவாதத்தில் இன்று கலந்து கொண்டு பேசினார்.இந்த மசோதாவானது, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று கூறினார். நிறைய மற்றும் ஒரேபோன்று காணப்படும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் அப்போது அவர் பேசினார்.இந்த மசோதா பற்றிய விவாதத்தில் அவர் பேசும்போது, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நாடு ஒன்றும் தரம்சாலா (ஓய்வு இல்லம்) இல்லை.நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற எவரேனும் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்றால், அவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள் என்றும் பேசினார்.ரோகிங்கியாக்களோ அல்லது வங்காளதேச நாட்டினரோ, குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவுக்குள் வந்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதன்பின்னர் அந்த மசோதா, அவையில் நிறைவேறியது.

மூலக்கதை