ஜான்வி கபூருடன் நடிக்க தயங்கும் சல்மான் கான்

மும்பை,பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாகிறது.இப்படத்தில் நடிகர் சல்மான் கான், அவரை விட 31 வயது குறைவான ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்தது இணையத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், இளம் நடிகையான ஜான்வி கபூருடன் நடிக்க தயக்கம் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், "எனக்கு அனன்யா பாண்டே அல்லது ஜான்வி கபூருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், 10 முறை யோசிப்பேன் . 10 முறை யோசித்த பின்புதான் அவர்களுடன் நடிப்பேன்'என்றார்..
மூலக்கதை
