கோபிசந்தின் 33-வது படத்தில் ரித்திகா நாயக்?

  தினத்தந்தி
கோபிசந்தின் 33வது படத்தில் ரித்திகா நாயக்?

சென்னை,நடிகை ரித்திகா நாயக், விஷ்வாக் செனின் "அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்" படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். இருப்பினும், அவருக்கு உடனடியாக அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.இப்போது, அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர துவங்கி இருக்கின்றன. அதன்படி, ரித்திகா நாயக் மெர்லபாகா காந்தி இயக்கத்தில் வருண் தேஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.மேலும், இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கும் கோபிசந்தின் 33-வது படத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மூலக்கதை