மியாமி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

  தினத்தந்தி
மியாமி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மியாமி, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பிலிப்பைன்சின் அலெக்ஸாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்டுகளை டை பிரேக்கர் வரை போராடி ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்பை உண்டாக்கியது. இருப்பினும் அந்த செட்டை பெகுலா எளிதில் கைப்பற்றினார். . இந்த ஆட்டத்தில் 7-6, 5-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.இவர் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மூலக்கதை