சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்துவது கடினம்: வாட்சன்

சென்னை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்துவது கடினம் என சென்னை அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறியதாவது,சேப்பாக்கத்துக்கு வரும் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. சென்னையிடம் தரமான சுழற்பந்து வீச்சு உள்ளது. இங்கு, சென்னை அணியின் பலத்தை சமாளிப்பதற்கு ஏற்ப பெங்களூரு அணியினர் தங்களது ஆடும் லெவனில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் அதில் எந்த தவறும் செய்து விடக்கூடாது. இல்லையென்றால் சிக்கலாக மாறி விடும். ஏனெனில் சேப்பாக்கம், சென்னை அணியின் கோட்டை என்பதை மறந்து விட வேண்டாம்.ஒட்டுமொத்த சென்னை அணியும் சேப்பாக்கம் ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் அற்புதமாக பந்து வீசினர். இங்குள்ள ஆடுகளத்தில் அவர்கள் அணிக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். குறிப்பாக நூர் அகமது ஏற்படுத்திய தாக்கம் சென்னை அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கும். விக்கெட் வீழ்த்தும் ஒரு பவுலர் கிடைத்திருக்கிறார்' என்றார்.
மூலக்கதை
