வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் அதிரடி... ஐதராபாத்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

  தினத்தந்தி
வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் அதிரடி... ஐதராபாத்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவிண்டன் டிகாக்(1), மற்றும் சுனில் நரைன்(7) அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே, ரகுவன்ஷியுடன் ஜோடி சேர்ந்தார். ரஹானே 38 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டிய ரகுவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 60 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர்களில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி ரன் வேட்டையில் ஈடுபட்டார். அவர் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி 32 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.

மூலக்கதை