குஜராத்: நான்கு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

காந்திநகர்,குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள சும்ரா கிராமத்தை சேர்ந்தவர் பானுபென் டோரியா. இவருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தையும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில், பானுபென் டோரியா, நேற்று தனது 4 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு கொன்றதுடன், தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிணற்றில் குழந்தைகளின் உடல்கள் மிதப்பதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்த 4 குழந்தைகள் உட்பட 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பானுபென் டோரியா, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 4 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூலக்கதை
