இந்திய பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு - திருக்குறள் சொல்லி நன்றி கூறிய மோடி - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இந்திய பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு  திருக்குறள் சொல்லி நன்றி கூறிய மோடி  லங்காசிறி நியூஸ்

3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடியை, நேற்று இரவு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தலைமையில் 6 அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.  இன்று காலை தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு முப்படைகளின் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இதுவே முதல் முறையாகும். இதன் பின்னர், இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படும் சில திட்டங்களை, பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இதனையடுத்து, இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா(mitra vibhushana) விருதை வழங்கி இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக்க கெளரவித்துள்ளார்.  விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு" எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை சொல்லி தனது நன்றியை தெரிவித்தார். "இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும்.ஜனாதிபதி திசாநாயக்க அவர்களால் இன்றைய தினம் 'இலங்கை மித்ர விபூஷண்' என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும். இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும். அத்துடன் இந்திய -… pic.twitter.com/neMmmJoMuG அத்துடன் இந்திய - இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த விருது, வெளிநாட்டு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும்.     

மூலக்கதை