வார இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

  தினத்தந்தி
வார இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

மும்பை,இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பங்குச்சந்தை இன்று ஏற்றம்பெற்றது. வார இறுதி நாளான இன்று இந்தியாவிலும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.அதன்படி, 429 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 22 ஆயிரத்து 828 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 762 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 2 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 422 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 24 ஆயிரத்து 555 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1,310 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 157 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.204 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 226 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 914 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 402 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை