மத்தியபிரதேசம்: புலி கடித்து குதறியதில் சிறுவன் பலி

  தினத்தந்தி
மத்தியபிரதேசம்: புலி கடித்து குதறியதில் சிறுவன் பலி

போபால், மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தையொட்டி பந்தவ்கர்க் புலிகள் சரணாலயம் உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து உணவு தேடி அருகே உள்ள தாமோகர் கிராமத்துக்குள் புலிகள் ஊடுருவது வாடிக்கையாக உள்ளது.இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தனது தாத்தாவுடன் கிராம ஓரத்தில் உள்ள சிற்றோடைக்கு குடிநீர் எடுக்க சென்றான். அப்போது அங்கே புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று அந்த சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியது.தொடர்ந்து அவனை ஒரு சில அடி தூரத்திற்கு வாயில் கவ்வி கொண்டு இழுத்து சென்றுவிட்டு பின்னர் விடுவித்து தப்பியோடியது. இந்த கோர சம்பவத்தில் சிறுவன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

மூலக்கதை