இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட செங்கப்பள்ளி அருகில் உள்ள முத்தம்பாளையம் ஊராட்சி கடைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாரதாமணி (வயது 46) இவர் தனது இருசக்கர வாகனத்தில் செங்கப்பள்ளி கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். பெட்ரோல் நிரப்பி விட்டு திரும்பவும் செங்கப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாரதாமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்து சாரதாமணி அளித்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
