ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... புதிய சாதனை படைத்த தோனி

  தினத்தந்தி
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... புதிய சாதனை படைத்த தோனி

லக்னோ,நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை- லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சென்னை சூப்பர் கிங்சின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி நேற்றைய ஆட்டத்தில் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.-ல் விக்கெட் கீப்பராக ஆட்டமிழக்கச் செய்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200 முறை ஸ்டம்பிங் செய்த முதல் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.

மூலக்கதை