எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்

  தினத்தந்தி
எர்ணாகுளம்ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்

கோவை, எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் (தெற்கு டெல்லி) இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் (எண்:- 06061) இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு 18-ந் தேதி இரவு 8.35 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. அந்த ரெயிலானது ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்ஷா, நாக்பூர், இடார்சி, போபால், பினா, ஜான்சி, குவாலியர், ஆக்ரா கண்டோன்மென்ட், மதுரா வழியாக செல்கிறது. இந்த ரெயிலானது நாளை இரவு 11 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு வருகிறது.இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மூலக்கதை