வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?

சென்னை,தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14-ந் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.120-ம், அதற்கு மறுநாள் பவுனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து ஆறுதலை கொடுத்தது. இந்த நிலையில் நேற்று விலை ஏறுமுகத்தை நோக்கி சென்றது. இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி, சென்னையில், ஆபரண தங்கம் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 71,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.8,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000க்கும் மேல் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என நகை வணிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மூலக்கதை
