"எந்த உருட்டல், மிரட்டலுக்கும் அடிபணியமாட்டோம்.. வாங்க ஒரு கை பார்ப்போம்..!" - மு.க.ஸ்டாலின் சவால்

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தருவோம், இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதி தரமுடியுமா? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது என அமித்ஷாவால் உறுதி அளிக்க முடியுமா? தமிழ்நாட்டிற்கு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி தரப்பட்டது என பட்டியல் போட முடியுமா? எந்த மசோதா கொண்டுவந்தாலும் திசை திருப்பல் எனக்கூறும் அமித்ஷா நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறட்டும். தி.மு.க.வின் பவர் என்ன என்று இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. கவர்னர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள் என குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி கூறினார். நாங்கள் மத்திய அரசிடம் கேட்பது பிச்சையல்ல, உரிமை. எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்க முடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள். குடைச்சல் கொடுக்காமல் நியாயமாக செயல்பட்டால் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. எந்த உருட்டல், மிரட்டலுக்கும் அடிபணியமாட்டோம். எப்படியெல்லாம் மிரட்டுவீர்கள் என தெரியும். உங்கள் பரிவாரங்களோடு வாருங்கள். ஒரு கை பார்த்து விடலாம்."இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மூலக்கதை
