ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்

  தினத்தந்தி
ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்

தேனி,தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார். இந்த மையத்தில் நீராவி குளியல், யோகா,நேச்சுரோபதி, அக்குபஞ்சர், பிசியோதெரபி, சிறப்பு தெரபி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இரவு கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்த சிகிச்சை மையத்தில் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். இதனிடையே, ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்.18) மதியம் தேனி புறப்பட்டு சென்றார்.

மூலக்கதை