இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்த இலங்கை - பாகிஸ்தான் உடனான பயிற்சி ரத்து - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்த இலங்கை  பாகிஸ்தான் உடனான பயிற்சி ரத்து  லங்காசிறி நியூஸ்

 இலங்கை பாகிஸ்தான் கடற்படைகள் திட்டமிட்டிருந்த கூட்டுப்பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.  ஆனால் கொழும்புவில் உள்ள இந்திய உயரதிகாரிகள், இலங்கை அரசிடம் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்ததன் காரணமாக, இந்த கூட்டுப்பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  திரிகோணமலை துறைமுகம், இந்தியா பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலை கொண்டுள்ளதாக ராணுவ நிபுணர்களை கருதுகிறார்கள். சீன கப்பல்கள் அடிக்கடி இலங்கை கடற்பகுதிக்கு வருவது தொடர்பாகவும், இந்தியா தனது கவலைகளை இலங்கையிடம் தெரிவித்துள்ளது. இலங்கையில், குறிப்பாக திருகோணமலையில் தனது மூலோபாய தடத்தை வலுப்படுத்த, இந்தியா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மோடியின் சமீபத்திய பயணத்தின் போது, இந்தியாவும் இலங்கையும் இராணுவ ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதற்கான ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, திருகோணமலையை எரிசக்தி மையமாக மாற்றுவது தொடர்பாக முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. 

மூலக்கதை