சென்னையின் முதல் ஏசி மின்சார ரெயில் புறப்படும் நேரம் என்ன? கட்டணம் எவ்வளவு?

  தினத்தந்தி
சென்னையின் முதல் ஏசி மின்சார ரெயில் புறப்படும் நேரம் என்ன? கட்டணம் எவ்வளவு?

ஏசி மின்சார ரெயில்சென்னையில் உள்ள மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. இந்த மின்சார ரெயிலின் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில்,சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது பயணிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இந்த புறநகர் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 1,116 பேர் நின்றும்,3,798 பேர் அமர்ந்தும் பயணிக்கலாம். இந்த ஏசி ரயிலானது அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் செல்லும்.இந்த ரெயில் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் போன்ற விபரங்கள் பின்வருமாறு; ஏசி மின்சார ரெயில் இயக்கப்படும் நேரம்;* முதலில் இந்த ஏசி மின்சார ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். இதன்பிறகு சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 7.48 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.45 மணிக்கும் சென்றடையும். * இதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டும் செல்லும். * மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில்கள், தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் செல்லும்.டற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.* தாம்பரத்தில் இருந்து அதிகாலையில் கடற்கரைக்கு புறப்படும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு வரும் போதும் இந்த ரயில்கள் புறநகர் பாதையில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் செல்லும் போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.* ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில்கள் இயக்கப்படாது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டும் தான் இந்த சேவைகள் இயக்கப்படும். கட்டண விபரம்;இந்தக ரயிலில் அதிகபட்சமாக ரூ 105 கட்டணமும் குறைந்தபட்சமாக ரூ 35 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டுக்கு ரூ 105 கட்டணமாகவும், தாம்பரம் டூ செங்கல்பட்டிற்கு ரூ 85 கட்டணமாகவும், தாம்பரம்-எழும்பூருக்கு ரூ 60 கட்டணமாகவும் செங்கல்பட்டு டூ எழும்பூருக்கு ரூ 85 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை