நிலவுக்கு அருகே வரும் இரு கோள்கள்.. வானில் நிகழும் அதிசயம்

  தினத்தந்தி
நிலவுக்கு அருகே வரும் இரு கோள்கள்.. வானில் நிகழும் அதிசயம்

சென்னை, நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. அந்த சமயத்தில் பல கோள்களை ஒரே நேரத்தில் நம்மால் காண முடியும். ஆனால் இந்த முறை நிலவுக்கு அருகே இரண்டு கோள்கள் வந்து நமது கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன. அதாவது, வெள்ளி மற்றும் சனி கோள்கள் வருகிற 25ம் தேதி அருகருகே சந்திக்க உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.அன்றைய தினம் வெள்ளி மற்றும் சனி கோள்களுக்கு கிழே தேய்பிறை நிலாவும் வர உள்ளதால் பார்ப்பதற்கு ஸ்மைலி எமோஜி (நிலவு சிரிப்பதை போல) போல காட்சியளிக்க உள்ளது. இவையனைத்தும் பளிச்சென காட்சியளிக்கும் என்பதால் சாதாரண கண்களாலேயே பார்க்க முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை