டெல்லிக்கு எதிராக அதிகபட்ச 'சேசிங்'... சி.எஸ்.கே-வின் சாதனையை முறியடித்த குஜராத் டைட்டன்ஸ்

  தினத்தந்தி
டெல்லிக்கு எதிராக அதிகபட்ச சேசிங்... சி.எஸ்.கேவின் சாதனையை முறியடித்த குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்,ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் 19.2 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 204 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 97 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பட்லருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 204 ரன் இலக்கை விரட்டி பிடித்ததன் மூலம் குஜராத் அணி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, டெல்லிக்கு எதிராக அதிகபட்ச ரன்னை சேசிங் செய்த சி.எஸ்.கே-வின் (188 ரன், 2008) சாதனையை முறியடித்து குஜராத் புதிய சாதனையை படைத்துள்ளது.டெல்லிக்கு எதிராக சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் விவரம்:204 ரன் - குஜராத் டைட்டன்ஸ், 2025188 ரன் - சென்னை சூப்பர் கிங்ஸ், 2008188 ரன் - சன்ரைசர்ஸ் ஐதராபாத், 2018186 ரன் - சென்னை சூப்பர் கிங்ஸ், 2010185 ரன் - ராஜஸ்தான் ராயல்ஸ், 2015

மூலக்கதை